பாலம்பாக்கம் அரசு பள்ளியில் ரூ. 36.5 லட்சத்தில் வகுப்பறை கட்டிடம்
திருவண்ணாமலை, ஆக.26- திருவண்ணாமலை மாவட்ட பட்டு கைத்தறி தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், தமிழ்நாடு வேட்டைக்காரர் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் இணைந்து, போளூர் தாலுகாவில் உள்ள முக்குரும்பை ஊராட்சி பாலம்பாக்கம் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டித் தர வலியுறுத்தி ஆக.25 அன்று பாலம்பாக்கம் கிராமத்தில் நடை பயணத்தை துவக்கினர். பட்டு கைத்தறி நெசவாளர் சங்க நிர்வாகி வெங்கடேசன் தலைமை தாங்கினார். பட்டு கைத்தறி நெசவாளர் சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலாளர் எம்.வீரபத்திரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலாளர் ப.செல்வன், சிபிஎம் தாலுகா செயலாளர் ரவிதாசன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் இரா.சிவாஜி, விவ சாயிகள் சங்க நிர்வாகி வெங்கடேசன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் ப.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாலம்பாக்கம் கிராமத்திலிருந்து துவங்கி போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை நடைபயணம் செல்ல திட்டமிட்டனர். அப்போது பாலம்பாக்கம் கிராமத்திற்கு வந்த போளூர் வட்டாட்சியர், வட்டார கல்வி அலுவலர் ஆகியோர், நடைபயணம் செல்ல முயன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது, ரூ.36.5 லட்சம் மதிப்பில் 2 புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் அடுத்த சில மாதங்களில் கட்டித் தரப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து நடை பயணப் போராட்டம் தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டது.