tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும் சிஐடியு விழுப்புரம் மாவட்ட மாநாடு கோரிக்கை

அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும் சிஐடியு விழுப்புரம் மாவட்ட மாநாடு கோரிக்கை

விழுப்புரம், செப்.29 - அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளருக்கு காலமுறை ஊதியம் வழங்கி, அரசு ஊழியராக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட மாநாடு வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் விழுப்புரம் மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஆர்.ராமதிலகம் தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றியத் தலைவர் எஸ்.உஷா சங்க கொடியை ஏற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் கே.சுதா வரவேற்றார். ஒலக்கூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.சினேகா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.தேவமணி துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் ஆர்.மலர்விழி வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். பொரு ளாளர் எஸ்.புனிதா வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். சிஐடியு மாவட்ட மாவட்டத் தலைவர் எஸ்.முத்து குமார், செயலாளர் ஆர்.மூர்த்தி, பொரு ளாளர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ரத்தினமாலா மாநாட்டை நிறைவு செய்து பேசினார். நிர்வாகிகள் தேர்வு மாவட்டத் தலைவராக கே.சுதா,  செய லாளராக ஆர்.மலர்விழி, பொருளாளராக ஆர்.சிநேகலதா உள்ளிட்ட 14 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.