tamilnadu

img

ரயில் நிலையத்திலிருந்து சிக்னல் வரை மேம்பாலம் சிஐடியு விழுப்புரம் மாவட்ட மாநாடு கோரிக்கை

ரயில் நிலையத்திலிருந்து சிக்னல் வரை மேம்பாலம் சிஐடியு விழுப்புரம் மாவட்ட மாநாடு கோரிக்கை

விழுப்புரம், அக்.14- விழுப்புரத்தில் தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் வகையில் ரயில் நிலையத்தில் இருந்து சிக்னல் வரை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சிஐடியு மாவட்ட மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. விழுப்புரத்தில் தோழர் சி.கோவிந்தசாமி நினைவுரங்கத்தில் சிஐடியு மாவட்ட 11வது மாநாடு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துகுமரன் தலைமையில் நடைபெற்றது.  பி.குமார் செங்கொடியை ஏற்றி வைத்தார். எச்.ரகோத்துமன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். கே.அம்பிகாபதி வரவேற்றார். மாநில பொது செயலாளர் ஜி.சுகுமாறன் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி வேலை அறிக்கையும், பொருளாளர் வி.பாலகிருஷ்ணன் வரவு-செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.சுந்திரமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாநிலச் துணைத்தலைவர் கே.விஜியன் நிறைவு செய்து பேசினார். ஆர்.கணபதி நன்றி கூறினார். தீர்மானங்கள் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் விழுப்புரம் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு வியாபாரிகள் குறைந்தபட்ச கூலி வழங்க மறுத்து வருகின்றனர். இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வியாபாரிகள் குறைந்த பட்ச கூலியை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், காலிபாட்டில் திரும்ப பெற தனியார் நிறுவனத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை அரசு இப்பணியில் ஈடுபடுத்த கூடாது, கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மழை காலத்தில் வேலையின்மைக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், மின்துறை பொதுத்துறை நிறுவனமாகவே செயல்பட வேண்டும், மின்துறையில் காலியாக உள்ள 66 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அதில் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் விடுபட்ட கேங்மேன்களுக்கு முன்னுரிமை அடிப்படை யில் பணி வழங்க வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும், மரக்காணம் உப்பள தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச கூலியை உறுதிபடுத்தவேண்டும், மழை காலத்தில் உப்பு தயாரிப்பு பணிகளுக்கு கூடுதல் உதவி அரசு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு மாவட்டத் தலை வராக ஆர்.சேகர், செய லாளராக ஆர்.மூர்த்தி, பொரு ளாளராக ஆர்.மலர்விழி உட்பட 15  நிர்வாகிகள் உட்பட 50 பேர் கொண்ட மாவட்டக் குழுவுக்கு தேர்வு செய்தனர்.