எம்ஆர்எப் போராட்டத்திற்கு சிஐடியு தொழிற்சங்கங்கள் ஆதரவு
சென்னை, செப். 27-
திருவொற்றியூர் விம்கோ நகரில் இயங்கி வரும் எம்ஆர்எப் டயர் தயாரிக்கும் தொழிற்சாலை நிர்வாகம் எந்த முன் அறிவிப்பும் செய்யாமல் ஆலையின் கதவை மூடி தொழிலாளர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
இதையடுத்து தொழிலாளர்கள் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக களத்திற்கு வந்து திருவள்ளூர் சிஐடியு மாவட்டக் குழு சார்பில் மாநில துணைத்தலைவர் கே.விஜயன் தலைமையில் தொழிலாளர்கள் போராட்ட நிதியாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கினர்.
மேலும் சிபிசிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள், மீஞ்சூர் பகுதி பொதுத் தொழிலாளர் சங்கம், வடசென்னை அனல் மின் நிலைய தொழிலாளர் சங்கம்,
நாடி தொழிலாளர் சங்கம், கும்மிடிப்பூண்டி இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கம், வல்லூர் அனல் மின் நிலைய தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதில் நிர்வாகிகள் ஜி.விநாயகமூர்த்தி, எஸ்.எம்.ஹனிப், இ.ஜெயவேல், ஜி.சலீல் குமார், என்.ரமேஷ்குமார், எஸ்.நரேஷ்குமார், சிபிஎம் வடக்கு பதிகு செயலாளர் எஸ்.கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
