சிஐடியு செயலாளர் குருநாதன் தாயார் காலமானார்
கிருஷ்ணகிரி, ஜூன் 12- ஓசூர் அண்ணா நகரில் வசிக்கும் சிஐடியு ஆட்டோ சங்கம் மாவட்டச் செயலாளர் குருநாதனின் தாயார் முனியம்மா என்கிற அருள்மேரி வயது முதிர்வு காரணமாக புதனன்று (ஜூன் 11) காலமானார். தகவல் அறிந்து சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், தலைவர் வாசுதேவன், துணைத் தலைவர்கள் பி.ஜி.மூர்த்தி, குணசேகரன், மார்க்சிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் நாகேஷ் பாபு, ஒன்றியச் செயலாளர் ஆர்.கே. தேவராஜ், செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாநகரக் குழு உறுப்பினர்கள் எம்.எம்.ராஜு, சீனிவாசன், மூத்த உறுப்பினர் சேதுமாதவன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.பிறகு, ஜூன் 12 அன்று அச்செட்டிப்பள்ளி அருகில் கிறிஸ்தவ மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.