tamilnadu

img

பருவகால ஊழியர்களை நிரந்தரம் செய்ய கோரி சிஐடியு உண்ணாநிலை

பருவகால ஊழியர்களை நிரந்தரம்  செய்ய கோரி சிஐடியு உண்ணாநிலை

கடலூர், ஜூலை 23 - பருவகால ஊழியர்களை நிரந்தரம் செய்யக்கோரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கத்தின்  சார்பாக கடலூர் தலைமை தபால் நிலையம்  அருகே உண்ணா நிலைப் போராட்டம் நடை பெற்றது. காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி 2013-2016 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த பருவ கால பணியாளர்களை உடனடியாக நிரந்தரம்  செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. கடலூர் மண்டலத்தில் 2025  கான பருவ கால ஊழியர்கள் ஏப்ரல், மே , ஜூன் மாத சம்பளத்தை உடனடியாக  வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர் களுக்கு குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதி யம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை களும் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்திற்கு மண்டலத் தலை வர் கலைவாணன் தலைமை தாங்கினார். ராஜமுருகன், சங்கர், பீமாராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன் துவக்கி வைத்து பேசினார். மாநில பொதுச்செயலாளர் புவனேஸ்வரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மண்டல செயல்தலை வர் ஆர்.இளங்கோவன், மண்டல செயலாளர்  கோ.சுதர்சன் பாபு ஆகியோர் விளக்க உரையாற்றினார்கள். மாவட்டச் செயலாளர்  டி.பழனிவேல் வாழ்த்திப் பேசினார். மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், சாவித்திரி, ஜே.ஸ்டாலின் ஆகியோர் பேசினர்.போராட்டத்தை நிறைவு செய்து  மாநிலத் தலைவர் பி.குமார் உரையாற்றி னார்.