tamilnadu

வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திடுக: செப்.30 இல் சிஐடியு தையல் தொழிலாளர்கள் போராட்டம்

சென்னை,செப்.28-  வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஒன்றிய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி செப்டம்பர் 30 அன்று சிஐடியு தையல் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சி யர்களிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு தையல் கலை ஞர்கள் சம்மேளனம் (சிஐடியு) பொதுச்செய லாளர் எம். ஐடா ஹெலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

தமிழ்நாடு முழுவதும்  5 லட்சத்திற் கும் மேற்பட்ட தையல் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்காக சுயமாக தையல் கடை வைத்து தொழில் செய்து வரு கின்றனர்.ஆனால் இத்தொழிலாளர்களின் வாழ் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது. ஒரு சில காலங்களில் மட்டுமே  தையல் கடைகளில் துணிகளை தைய்த்து வாங்கி உடுத்துகின்றனர். எனினும் பல காலங்களில் இவர்களுக்கு வேலை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில்தான்  அரசும் இவர்கள் மேல் பல சுமைகளை திணிக்கிறது. முறைசாரா ஏழை  தையல் தொழிலாளர்கள் வாழ்வாதா ரம் பாதிக்கின்ற வகையில் ஒன்றிய,மாநில அரசுக்கள் தையல் தொழிலுக்கு தேவை யான மூலப்பொருட்களின் மீது வரிகள், மின்சார கட்டண உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பலவிதமான வரிகள் மற்றும் கடை வாடகை, பராமரிப்பு செலவுகள், வாழ்க்கைக்கு தேவையான இதர பொருட்களின் விலை உயர்வு   ஆகிய காரணங்களாலும் தையல் தொழிலாளர்கள் தொழில் நடத்துவதற்கு வழியில்லாமல் மிகவும் சிரமத்துக்குள்ளா கியுள்ளனர்.   

எனவே தையல் கடைகளுக்கு மானிய விலையில் மின்சாரம்  வழங்க வேண்டும். சுய தொழிலாக தையல் தொழில் இருக்கி றது என்பதை கவனத்தில் கொண்டு மூலப் பொருட்களுக்கான ஜி எஸ் டி உள்ளிட்ட அனைத்து விதமான வரிகளையும் கைவிட வேண்டும். புதிய எலக்ட்ரானிக் தையல் இயந்திரங்கள்  வாங்குவதற்கும் மற்றும் தையல் தொழிலையும், தொழிலாளர்க ளையும் பாதுகாக்க வங்கிகள் மூலம் மானி யத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளில் பள்ளிச் சீருடைகளை அவர்களே தைய்த்துக் கொடுப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய, மாநில  அரசுகள்     பரிசீலித்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மேளனம் சார்பில் மாநிலம் முழுவதும் செப்டம்பர் 30 அன்று மாவட்ட ஆட்சியரி டம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப் படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.