புதுச்சேரியில் அண்ணா சிலைக்கு முதல்வர் மரியாதை
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளை யொட்டி, புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம் (எ) ஏ.கே.டி., சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், லட்சுமிகாந்தன், பிரகாஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.