tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இன்று ஈகைப் பெருநாள்:முதல்வர் வாழ்த்து!

சென்னை, ஜூன் 16- இஸ்லாமிய பெருமக்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ள தாவது; “நபிகள் நாயகம் காட்டிய வழி யில் சமத்துவம், சகோதரத்துவம், அன்பு  நெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும்  இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக் கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துக் கள்!

ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதில் ‘ஈத்துவக்கும் இன்பம்’ என்  பார் அய்யன் திருவள்ளுவர். அந்த இன்  பத்தை எய்திட இஸ்லாமிய பெருமக்க ளுக்கு வழிகாட்டுவதே இந்த பக்ரீத் பெரு நாள்! நபிகள் நாயகத்தின் போதனை கள் அன்றாட வாழ்வில் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறவழிக்  கான அறிவுரைகளாக அமைந்திருக் கின்றன.

நபிகள் நாயகத்தின் அத்தகைய அறி வுரைகளை பின்பற்றி வாழ்கின்ற இஸ்  லாமிய மக்கள் அனைவரும் இந்த பக் ரீத் பெருநாளை இனிதே கொண்டாடி மகிழ எனது நல்வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொள்கிறேன்” என்று கூறி யுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
தேமுதிகவும் ஒதுங்கிக்கொண்டது!

சென்னை, ஜூன்16- விக்கிர வாண்டி இடைத் தேர்தலை புறக்க ணிப்பதாக தேமு திக பொதுச்செய லாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரி வித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில், “தேர்தல் என்ற  ஜனநாயகம் இன்றைய ஆட்சியாளர்  களின் கையில் மிகப் பெரிய கேள்  விக்குறியாக உள்ளது. ஆட்சியாளர் களின் அதிகாரத்தில் தேர்தல் தவறாக நடத்தப்படுகிறது. இடைத்தேர்தல் மீது  நம்பிக்கை இல்லாததால் தொண்டர்  களின் உழைப்பு, நேரம், பணம் உள்ளிட்ட வற்றை வீணாக்க விரும்பவில்லை” என  தெரிவித்துள்ளார்.

ஜூலை 10 ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னதாக இந்த தேர்தலை  புறக்கணிப்பதாக அதிமுக தெரிவித்தி ருந்தது. தற்போது அதன் கூட்டணிக்கட்சி யான தேமுதிகவும் தெரிவித்திருக்கிறது.

சிபிஎம் நெல்லை அலுவலகம் மீதான தாக்குதலுக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம்

சென்னை, ஜூன் 16- ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர்  தலைவர் இரா.அதியமான் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:

“சட்டம்” திருமண வயதை அங்கீக ரித்தாலும் சாதி வெறியர்கள் தன் மூளை யை இன்னும் வர்ணாசிரமத்திடம் அடகு  வைத்துள்ள போக்கின் வெளிப்பாட கத்தான் சிபிஎம் அலுவலகம் சாதிவெறிக் கும்பலால் சூறையாடப்பட்டிருக்கிறது. இச் சம்பவத்தை ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது. 

பட்டப்பகலில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை தாக்கிய  சாதி வெறி கும்பலை கண்டிப்பதோடு இதை பின்னாள் இருந்து இயக்கும் கும்  பல் மீது வழக்கு பதிவு செய்து குண்டர்  தடுப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். காதல் திரு மணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

நீட் தேர்வை தாங்கிப்பிடிப்பது ஏன்?: ஒன்றிய அரசுக்கு முதல்வர் கேள்வி

அண்மையில் நீட் தேர்வில் கருணை மதிப்பெண் அடிப்படையில் முறைகேடு நடந் தது தொடர்பாக குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வு  ஓஎம்ஆர் தாள்களை (விடைத்தாள்) கண்கா ணிப்பாளர்கள் சேதப்படுத்தியதாகக் கூறி,  கோத்ராவில் உள்ள ஒரு நீட் தேர்வு மையத்தின்  தலைவர் உட்பட ஐந்து பேரை குஜராத் போலீ சார் கைது செய்துள்ளனர் என்று, பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி ஒன்றை வெளி யிட்டிருந்தது.

இந்த செய்தியை தனது எக்ஸ் சமூக  வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு முறைக்கு மாற்று அவசர தேவையை இந்த செய்தி சுட்டிக்காட்டி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “பல்லாயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு வரும் சமுதாயத்தில், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்திற்காக அதிக  வாய்ப்புகளை வழங்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக நீட் தேர்வு இந்த வாய்ப்பை தடுத்துக் கொண்டிருக்கிறது.

நீட் தேர்வால் மாணவி அனிதா உள்ளிட்ட எண்ணற்ற மாணவர்கள் பரிதாபமாக தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர். தகுதியின் அளவுகோலாக கருதப்படும் நீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் ஒரு மோசடி என்பதை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த மாணவர் விரோத, சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை பாதுகாப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘மேலிட’ உத்தரவால் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது
முன்னாள் ஒன்றிய அமைச்சர்
ப.சிதம்பரம் விமர்சனம்

சென்னை, ஜூன் 16-  தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பா ளரின் தேர்தல் வாய்ப்பை எளிதாக்க வேண்டும் என்ற ‘மேலிடத்தின்’ உத்தர வால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரம்  விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்  வலைத்தள நபதிவில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவை அதிமுக எடுத்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பா ளரின் தேர்தல் வாய்ப்பை எளிதாக்க வேண்டும் என்ற ‘மேலிட’ உத்தரவு அக்  கட்சிக்கு வந்துள்ளது என்பதற்கு அக்கட்சி  எடுத்துள்ள முடிவே தெளிவான சான்று.  தங்களுக்குப் பதிலாக பாமகவை நிறுத்தி,  பாஜகவும், அதிமுக திமுகவுக்கு எதிராக போட்டியிடுகின்றன. திமுக வேட்பாளர் அமோக வெற்றி பெறுவதை இந்தியா கூட்டணி உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
 

 

 

;