tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர்களுக்கு முதல்வர் வாழ்த்து

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களான சு.வெங்கடேசன், ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர், கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்,  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.சம்பத், பெ.சண்முகம் ஆகியோருடன் சனிக்கிழமை நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது, வேட்பாளர்களுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் திமுக தலைவர்கள்  கே.என்.நேரு, க.பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.