முதலமைச்சரின் கிருஷ்ணகிரி வருகை அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு
கிருஷ்ணகிரி, செப். 8- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழாக்களில் கலந்துகொள்ளவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணி களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி ஆடவர் கலைக்கல்லூரி, பேளகொண்டப்பள்ளி விமான நிலையம், மாநகராட்சி வளாகம், கிராண்ட் பேலஸ், சிறப்பு பொருளாதார மண்டல வளாகம், அன்பு சோலை காப்பகம், குருபரப்பள்ளி, டெல்டா நிறுவன பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் விழாவிற்கான வேலைகள் மற்றும் புதிய திட்டப்பணிகள் தொடர்பாக அமைச்சர் நேரில் பார்வை யிட்டார். மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஓசூர் ஒய்.பிரகாஷ், பர்கூர் தே.மதியழகன், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.எ.சத்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் அமைச்சருடன் இருந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழாவுக்கான பாதுகாப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஏற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், ஓசூர் மாநகராட்சி ஆணையர் முகம்மது ஷபிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.