விழுப்புரத்தில் முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
விழுப்புரம், ஆக.26- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் காணொலி காட்சி வாயிலாக நகர்ப்பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச் சரின் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் நகராட்சிக் குட்பட்ட கீழ்ப்பெரும் பாக்கத்தில் உள்ள ஸ்ரீ நட ராசா அரசு உதவி பெறும் நடு நிலைப்பள்ளியில், தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்கு குழுத் தலைவர் கு.செல்வ பெருந்தகை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். விழு ப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் இரா.லட்சு மணன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன், விழுப்புரம் நகர்மன்ற தலை வர் தமிழ்ச்செல்வி பிரபு, மகளிர் திட்டம், திட்ட இயக்குநர் செந்தில் வடிவு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) திருமதி.இந்திரா தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
