tamilnadu

img

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நீட்டிப்பு!

சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் ரயில் சேவை ஜூலை 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாரம் 4 நாள்கள் (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இயங்கும் சிறப்பு வந்தே பாரத் ரயில், சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 11, 12, 13, 14, 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்குப் புறப்பட்டு அதேநாள் பிற்பகல் 1.50 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும்.

அதே போல மறுமார்க்கத்தில் ஜூலை 11, 12, 13, 14, 18, 19, 20, 21 (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்குக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் அதேநாள் இரவு 11 மணிக்குச் சென்னையை வந்தடையும்.

இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

;