tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

எம்எல்ஏ விடுதலை

சென்னை:   2018 ஆம் ஆண்டு வட மாநிலங்களில் பட்டியலின அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் பலியான குடும்பங்களுக்கு ஒன்றிய அரசு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வலியுறுத்தி எஸ்.எஸ். பாலாஜி தலைமையில் விசிகவினர் அனுமதியின்றி போராட்ட த்தில் ஈடுபட்டதாக பாலாஜி உட்பட 6 பேர் மீது அன்றைய அதிமுக அரசு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் விடுதலை செய்தது. ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு சென்னை: ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் (சமக்ர சிக்ஷா அபியான்) தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.2,152 கோடி நிதியை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆசிரியர்கள் பிப்.21 முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஷங்கரின் சொத்துக்கள் முடக்கம்

திரைப்பட இயக்குநர் ஷங்கர் தனது கதையைத் திருடி ‘எந்திரன்’ திரைப் படத்தை எடுத்ததாக, அவர் மீது நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு, உயர்நீதி மன்றத்தில் நடந்து வரு கிறது. இந்த நிலையில், இதைக் காரணம் காட்டி, இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை அதிரடியாக முடக்கியுள்ளது அம லாக்கத்துறை.2010 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ திரைப் படம் வெளிவந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். இது தனது கதையான ஜூகி பாவைத் திருடி, எந்திரன் திரைப்படம் தயாரிக்கப் பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவ லகத்தில் ஆரூர் தமிழ்  நாடன் புகார் கொடுத்தார். 10 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், 6.6.2019 அன்று நீதிபதி புகழேந்தி வழங்கிய தீர்ப்பில், “கலாநிதிமாறன் விடுவிக்கப்பட்டார். 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் எந்திரன் திரைப் பட கதை காப்புரிமை தொடர்  பான வழக்கில், இயக்குநர் ஷங்கரின் சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடி யாக முடக்கியுள்ளது.

சிறுமி  வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு 20 ஆண்டு சிறை

16 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை தாயாக்கிய வழக்கில் தொழி லாளிக்கு ஆயுள் தண்டனையும், 4 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்ட னையும் விதித்து கடலூர் போக்சோ நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி. வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு கீழகடம்பூர் தொழிலாளர்கள் பாலு (54), விநாயகம் (55), ராமலிங்கம் (60), மேலகடம்பூர் வேல்முருகன் (33), வேலம்பூண்டி  வீராசாமி (39) ஆகிய 5 பேரும் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளனர்.  அப்போது, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.  இது பற்றி சிறுமி தரப்பில், சேத்தியாத்  தோப்பு மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து, 5 பேரை கைது செய்தனர். இதற்கிடையில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  இந்த வழக்கில் அனைத்து விசா ரணைகளும் முடிவடைந்த நிலையில், நீதிபதி லட்சுமி ரமேஷ் தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாத மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை எப்படி மனம் வந்து இப்படி நடக்க முடிந்தது என கேள்வி எழுப்பி இந்த வழக்கில் வீராசாமி மீதான குற்றம் டி.என்.ஏ. பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும் , ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். பாலு, விநாயகம், ராமலிங்கம், வேல்முருகன் ஆகிய 4 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்ட னையும், வேல்முருகனுக்கு ரூ.15 ஆயிரம் அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தர விட்டார்.