tamilnadu

சென்னை - மைசூருக்கு அதிவிரைவு ரயில் மார்க்கம்

சென்னை:
சென்னை - மைசூரு இடையே மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறனுடைய அதிவேக ரயில் மார்க்கம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யவும் வரைவு வடிவமைப்பை உருவாக்கவுமான டெண்டர் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சென்னை - பெங்களூரு - மைசூரு இடையிலான 435 கிலோமீட்டர் தூரத்தை சதாப்தி ரயில்கள் 7 முதல் ஏழரை மணி நேரத்தில் கடக்கின்றன. இந்நிலையில் இந்த மார்க்கத்தில் அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டால் பயண நேரம் பாதியாகக் குறையும் என்பதால், தேசிய அதிவிரைவு ரயில் கழகம்  நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இதற்காக சில உயர்மட்ட மற்றும் நிலத்தடிக் கட்டமைப்புகளுடன் கூடிய ரயில்வே மார்க்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த ரயில்வே மார்க்கம் முக்கிய நகரங்கள், வணிக மற்றும் பொருளாதார மையங்களை இணைக்கும் வகையில், அதிவிரைவுச் சாலைகளை ஒட்டி திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

;