கோவை புரூக்பாண்ட் சாலை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
டெல்லியில் இருந்து கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில், காலை கோவை புரூபாண்ட் சாலை அருகே உள்ள தண்டவாளத்தில் வந்த போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரிய ஆண் ஒருவர் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ரயில்வே காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று பிரதேதத்தை கைப்பற்றினர். அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்ததற்கான அடையாளங்கள் இருந்ததை தொடர்ந்து, விசாரித்ததில் அரசு மருத்துவமனையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்தவர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
நோயால் அவதிப்பட்டு வந்த அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதை அறிந்த பயணிகள் ரயிலை விட்டு இறங்கி தண்டவாளத்தில் குவிந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.