tamilnadu

img

தென் மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 4 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, காரைக்கால் பகுதிகளில் ஓருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.