tamilnadu

img

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட தமிழக கடலோரப்பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி உடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம், மயிலாடுதுறை,கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,அரியலூர்,பெரம்பலூர்,சேலம்,தருமபுரி,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.