சென்னை:
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத் திற்கு சேலம், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, கோவை, மதுரை, தேனி, திண்டுக் கல், திருச்சி, நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக் கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங் களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்.
சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர்,தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் அக்டோபர் 9 ஆம் தேதி, அந்தமான் ஒட்டியுள்ள பகுதியில் உருவாகக் கூடும். அதனைத் அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மாண்டலமாக வலு பெறக்கூடும்.இவ்வாறு தெரிவித்துள்ளது.