tamilnadu

img

12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு  

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, விருதுநகர், சிவகங்கை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும்.

தொடர்ந்து இன்று முதல் 26 ஆம் தேதிவரை பெரும்பாலும் இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

;