tamilnadu

img

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை:
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:வெப்ப சலனம் காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழையும், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

;