tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

சென்னை, செப்.14-   ஆதம்பாக்கம், பெரி யார் நகரை சேர்ந்தவர் மலர் (40). இவர் அதே பகுதி யில் பூ வியாபாரம் செய்து வரு கிறார். அதே பகுதியை சேர்ந்த பாஜக மண்டல செயற்குழு உறுப்பினரும், ஆட்டோ ஓட்டுநருமான நடராஜன் (51), பூக்கடை அருகே, ஆட்டோவை நிறுத்தும் போதெல்லாம் மலரிடம் இரட்டை அர்த்ததுடன் பேசிய வந்துள்ளார். இதனை மலர் கண்டுகொள்ளாமல் இருந்தார்.  இந்தநிலையில் வெள்ளி யன்று நடராஜன் மலரிடம் அநா கரீகமாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் தன்னு டைய ஆசைக்கு இணங்கா விட்டால் கொன்று விடுவேன், என எச்சரித்துள்ளார்.  இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் மலர் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் நடராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்

சென்னை, செப்.14- வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30 வயது வாலிபர், சுற்றுலா பயணியாக தாய்லாந்து சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பி வந்தார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது பச்சை பூக்கள், பழம் என காற்றுபுகாத 12 பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் துணிகளுக்கு மத்தியில் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.  அவைகளை பிரித்து பார்த்தபோது அவற்றில் உயர்ரக, பதப்படுத்தப்பட்ட கஞ்சா இருந்ததை கண்டு பிடித்தனர். 12 பாக்கெட்டுகளில் சுமார் 3 கிலோ கஞ்சா இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.3 கோடி என கூறப்படுகிறது.  இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் இரு வரையும் கைது செய்து, கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

6 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்: இன்று கடைசி நாள்

சென்னை, செப்.14- நடப்பு ஆண்டில் அபராதம் இன்றி ஐடிஆர் தாக்கல் செய்ய திங்களன்று (செப்.15) கடைசி நாளாகும். இதுகுறித்து வருமான வரித்துறை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  கணக்கு தாக்கல் தொடர்ந்து வருகிறது. வருமான வரிக் கணக்கு தாக்கல், வரி செலுத்துதல் மற்றும் பிற சேவைகளில் வரி செலுத்துவோருக்கு உதவ, 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. தொலைபேசி அழைப்புகள், எக்ஸ் வலைதளங்கள் மூலமும் வரி செலுத்துவோரின் சந்தேகங்களை வருமான வரித் துறை தீர்த்து வருகிறது. இதுவரை கணக்கு தாக்கல் செய்யாதவா்கள், கடைசி நேர நெரிசலைத் தவிா்க்கும் வகையில் முன்கூட்டியே தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. 2025–26 மதிப்பீட்டு ஆண்டுக்கான கணக்கு தாக்கலுக்கான கடைசித் தேதி ஜூலை 31 என்றபோதும், ஐடிஆர் படிவத்தில் மேற்கொண்ட சில மாற்றங்கள் காரணமாக கால அபராதம் இன்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை செப்.15 வரை நீட்டித்து வருமான வரித் துறை கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது.வருமான வரிக் கணக்கு தாக்கல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்துள்ளது. 2023–24 நிதியாண்டில் கணக்கு தாக்கல் ரூ.6.77 கோடியாக இருந்தது, 2024–25 நிதியாண்டில் ரூ.7.28 கோடியாக உயர்ந்தது. இது 7.5 விழுக்காடு வளர்ச்சியாகும்.

கஞ்சா விற்பனை: தலைமறைவான தாய் –மகன் உள்பட 4 பேர் கைது

சென்னை, செப். 14– ஓட்டேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தாய், மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகர காவல், ஓட்டேரி காவல் துறையினர்  ஓட்டேரி டோபிகானா பகுதியில் கண்காணித்து, அங்கு கஞ்சா மற்றும் பட்டா கத்தியுடன் இருந்த அருண் நாகராஜ், ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2.3 கிலோ கஞ்சா, 1 பட்டா கத்தி, பணம் ரூ.2,500 மற்றும் 1 எடை இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். விசாரணையில் தலைமறைலவாக இருந்த வசந்தகமன் மற்றும் பால் பிரவீன் ஆகியோர் வடமாநிலம் சென்று கஞ்சாவை வாங்கி வந்து சிலரிடம் கொடுத்து பாக்கெட்டுகளாக பிரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய நரேந்திரன், அவனது தாயார் ஜான்சி, அருண்குமார், விமல்குமார் ஆகிய 4 நபர்களை கைது செய்தனர்.

நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்று வந்தவர் பலி

சென்னை, செப்.14- சென்னையில் நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த முகமது நஸ்ருதீன் (50) என்பவர் உயிரிழந்தார். சென்னை மீர்சாகிப்பேட்டை அருகே கடந்த ஜூலையில் நாய் கடித்து முகமது நஸ்ருதீன் என்ப வர் காயமடைந்தார். இதைய டுத்து, அருகாமையில் இருந்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனை யில் உடனடியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி மீண்டும் காய்ச்சல் வந்தது. இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார்.அவரை பரி சோதனை செய்த மருத்துவர்கள் ரேபிஸ் நோயால் பாதித்திருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி முகமது நஸ்ருதீன் உயிரிழந்தார்.