கிராமப்புற சமூகங்களை மேம்படுத்தும் கனரா வங்கி
சென்னை, செப்.2- கனரா வங்கி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அதன் சென்னி மலை கிளையில் “செறிவு பிரச்சாரம்” முகாமை கடந்த ஆக 29 அன்று வெற்றிகரமாக நடத்தியது. ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெறும் ஒரு பெரிய, மாநில அளவிலான முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த நிகழ்வு, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் பயனாளிகளை சென்றவடைவதை உறுதிப்படுத்துவதிலும் நிதி சார்ந்த கல்வி யறிவை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தியது. வங்கி யின் சென்னை வட்ட அலுவலகத்தின் தலைமைப் பொது மேலாளர் கே.ஏ.சிந்து தலைமையில் இந்த பிரச்சாரம் நடை பெற்றது. பொது மேலாளர் ஒய். சங்கர் மற்றும் ஈரோடு பிராந்தியத் தலைவர் சரவணன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அத்தியாவசிய நிதி சேவைகளை தங்கள் வீட்டு வாசலுக்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட இந்த முகாமில் 300க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்ச மாக, ஆயுள் மற்றும் விபத்து காப்பீட்டுத் திட்டங்களில் 130 பயனாளிகள் சேர்க்கப்பட்டனர்.