காப்பீட்டுத் துறையை பாதுகாக்க பிரச்சாரம்
கிருஷ்ணகிரி, ஜூலை 30- தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் 30 ஆவது மாநில மாநாட்டை ஒட்டி மாநிலம் தழுவிய வாகன, கலைக்குழு பிரச்சாரம் ஓசூரில் நடை பெற்றது. எல்ஐசியை, அரசுத்துறை, பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை பாதுகாத்திட வலியுறுத்தி, ஓசூர் வேளாங்கண்ணி பள்ளி எதிரில் உள்ள பூங்காவிலும், பேருந்து நிலை யம், எல்ஐசி அலுவலகம் முன்பும் பிரச்சாரம் நடைபெற்றது. சேலம் கோட்ட இணைச் செயலாளர் சந்திரமௌலி தலைமையில் மூத்த தோழர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தனர். ஓசூர் கிளை உதவி மேலாளர் அனுப், எல்ஐஏஎஃப்ஐ பொறுப்பாளர் குண சீலன், எல்ஐசிஏஐ தலைவர் முருகன் நாய னார், நிர்வாகிகள் சின்னச்சாமி நடராஜ், மாதையன் செல்வகுமார், ஞான செல்வம், சிவப்பிரகாஷ், மாதேஸ்வரன் சோமசுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சேலம் கோட்ட துணை தலைவர் ஹரிணி நன்றி கூறினார்.