tamilnadu

img

கல்கேரி தோழர் சி.முருகேஷ் அகால மரணம்: தலைவர்கள் அஞ்சலி

 கல்கேரி  தோழர் சி.முருகேஷ்  அகால மரணம்: தலைவர்கள் அஞ்சலி

கிருஷ்ணகிரி, ஆக.16- மார்க்சிஸ்ட் கட்சி தளி ஒன்றியக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத் தலைவருமான கல்கேரி தோழர் சி.முருகேஷ் (46 வயது) ஆக.14 அன்று இரவு திடீர் மாரடைப்பால் மரண மடைந்தார். தோழர் சி.முருகேஷ் தேன்கனிக் கோட்டை வட்டம், கல்கேரி கிரா மத்தின் தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவ ருக்கு ஒரு சகோதரி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் (திருமணமானவர்கள்) உள்ளனர். அவரது சகோதரி, 2018ல் கொலை செய்யப்பட்ட தோழர் சுரேஷின் மனைவி ஆவார். கல்கேரி கிராமத்தில் உள்ள கோவிலில் தலித்துகள் வழிபடும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில், 2009 ஆண்டு முதல் தீண்டாமை கொடுமை தீவிரம் அடைந்தது. இதனால் மார்க்சிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தீண்டாமை கொடுமைக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தப் போராட்டங்களின் உச்சகட்ட மாக 2010 ஜனவரி 1ல் கல்கேரியில் அப்போது விவசாயிகள் சங்கத் தலை வர்கள் கே.பாலகிருஷ்ணன், டி.ரவீந்திரன், பி.டில்லிபாபு தலைமையில் ஆலய நுழைவு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் தோழர் சி.முருகேஷின் மைத்துனர் சுரேஷ் முன்னணி ஊழியராக செயல்பட்டார். போராட்டம் வெற்றிபெற்று தலித் மக்கள் கோவிலுக்குள் நுழைந்து வழிபட அனுமதி வழங்கப்பட்டது. எனினும், இப்போராட்டத்தில் முன்னின்று செயல்பட்ட தோழர் சுரேஷ், 8 ஆண்டுகள் கழித்து 2018 ஏப்ரல் 18ல் ஆதிக்க சாதியி னரால் சூழ்ச்சியாக கொலை செய்யப் பட்டார். இதற்கான தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வழக்கும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இந்தப் போராட்டங்க ளிலும், சுரேஷ் கொலை வழக்கையும் தோழர் சி.முருகேஷ் முன்னின்று நடத்தி வந்தார். ஓசூர் குணம் மருத்துவமனையில் சுகாதார பணியாளர்களின் மேலாளராக பணியாற்றிக்கொண்டே, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி வந்தார். கடந்த 14ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த அவரது உடல், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு உடற் கூறாய்விற்காக எடுத்துவரப்பட்டு, 15ஆம் தேதி மாலை சொந்த ஊரான கல்கேரியில் அடக்கம் செய்யப்பட்டது. தகவல் அறிந்து சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விவசாயிகள் சங்க தலைவர்கள் மருத்துவமனையில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இரங்கல் கூட்டம் கல்கேரியில் தளி ஒன்றியச் செய லாளர் நடராஜன் மறைந்த தோழர் சி.முரு கேஷ் மீது செங்கொடி போர்த்தி மலர்வளையம் வைத்து செவ்வஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதி நிகழ்ச்சியில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், சி.பி.ஜெயராமன், பிரகாஷ், மகாலிங்கம், மூத்த தலைவர் நாகராஜ்ரெட்டி, வட்ட ஒன்றிய செயலாளர்கள் தேவராஜ் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர்கள் அனுமப்பா, சீனிவாசன் குமாரவடிவேல், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆனந்தகுமார், கட்டுமான சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன், சிபிஐ தலைவர் மாதேஷ், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் நஞ்சாரெட்டி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  முருகேஷ் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.