tamilnadu

img

வடலூர், திருவண்ணாமலையில் காலை உணவுத் திட்ட துவக்கம்

வடலூர், திருவண்ணாமலையில் காலை உணவுத் திட்ட துவக்கம்

வடலூர், ஆக.26- வடலூர் அருகே உள்ள பார்வதிபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில், தமிழக அரசின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தினை வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.  ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சி யர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகி யோர் தொடங்கி வைத்தனர்.  நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு “முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து,  பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண் ணாமலை முகல்புரா முஸ்லிம் நிதி யுதவி தொடக்கப்பள்ளியில் திட்டத்தை  தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திரு வண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், திருவண்ணாமலை நாடாளு மன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.