ரேபிஸ் நோய் பாதித்த சிறுவன் உயிரிழப்பு
கோவை, அக்.14- வெறிநாய் கடித்து ரேபிஸ் பாதித்த சிறுவன் கோவை அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் அடுத்துள்ள காரமடை பகுதி யை சேர்ந்த மதி கிருஷ்ணன் என்ற 15 வயது சிறுவனை வெறிநாய் கடித்து உள்ளது. இதைத் தொடர்ந்து அந்த சிறு வனுக்கு கடந்த 9 ஆம் தேதியன்று திடீ ரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. மூச்சு விடுவதிலும் சிரமம் இருந்தது. இதையடுத்து அந்த சிறுவனின் பெற் றோர் மகனை அங்கு உள்ள ஒரு தனி யார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவனுக்கு நாய்க் கடித் ததால் ரேபிஸ் நோய் பாதிப்பு இருப் பதை கண்டறிந்தனர். நோய் முற்றியதால் நாயின் செயல் பாடுகள் அந்த சிறுவனை தொற்றிக் கொண்டது. இதையடுத்து அந்த சிறு வனின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக கடந்த 10 ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வெறிநாய் கடி சிகிச்சை வார்டில் சிறுவனை அனு மதித்து மருத்தவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் செவ்வா யன்று பரிதாபமாக இறந்தார். நாய் கடித்து ரேபிஸ் நோய் பாதித்து சிறுவன் இறந்துள்ள சம்பவம் அந்த பகுதியைச சேர்ந்த பொதுமக்கள் மத்தி யில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பழங்குடியின மாணவர்களுக்கான பள்ளி வாகனம் இயக்கம் உதகை, அக்.14- பழங்குடியின மாணவர்களுக்கான பள்ளி வாகனத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக ரூ.41.33 லட்சம் மதிப்பில் 3 பள்ளி வாகனங்கள் மற்றும் ரூ.85 லட்சம் மதிப்பில் பழங்குடி யினர்களுக்கான 5 நடமாடும் மருத்துவ வாகனங்கள் என 8 வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்களன்று நடைபெற் றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண் ணீரு கலந்துக் கொண்டு, துறை அதிகாரிகள் மற்றும் ஓட்டு நர்களுக்கு சாவிகளை வழங்கி கொடியசைத்து துவக்கி வைத் தார். இதன்பின் அவர் பேசுகையில், தமிழ்நாடு முதல்வர், கடந்த அக்.6 ஆம் தேதி திருச்சி, தருமபுரி, சேலம், கள்ளக் குறிச்சி, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு 26 வாகனங்களை பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளி களின் பயன்பாட்டிற்காகவும், கோவை, தருமபுரி, ஈரோடு, நீல கிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பழங்குடியின மக்களின் மருத்துவ பயன்பாட்டிற்காகவும் 20 புதிய நடமாடும் மருத்துவ வாகனங்களை வழங்கினார். இதில், நீலகிரி மாவட்டம் கூட லூர் பகுதியில் உள்ள ஜிடிஆர் கார்குடி, ஜிடிஆர் பொக்கா புரம், ஜிடிஆர் குஞ்சப்பணை ஆகிய 3 பள்ளிகளுக்கு பள்ளி வாகனம் வழங்கப்பட்டது. பழங்குடியின மக்களின் மருத்துவ பயன்பாட்டிற்காக 5 நடமாடும் மருத்துவ வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்கப்பட்டுள்ளது, என்றார். இந்நிகழ்வில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கார்குடி, பொக்காபுரம், குஞ்சப்பனை உள்ளிட்ட மூன்று அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள் தினந்தோறும் பள்ளிக்கு வர போதிய வாகன வசதியின்றி தவித்து வந்தனர். தற்போது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, வாகனங் கள் வழங்கப்பட்டுள்ளதற்கு அனைத்து தரப்பினரும் வர வேற்பு தெரிவித்துள்ளனர்.
தென்பெண்ணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தருமபுரி, அக்.14- ஈச்சம்பாடி அணைக்கு வரும் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர், அப்படியே திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், கம்பை நல்லூரை அடுத்த கே.ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இதிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம், ஈச்சம்பாடி, பெரமாண்டப்பட்டி, சாமண்டஹள்ளி, நவலை உள்ளிட்ட தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 10 கிராமங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 22 கிராமங்கள் என 32 கிராமங்களிலுள்ள 6,250 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. இந்நிலையில், தென்பெண்ணையாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கிருஷ்ணகிரி கேஆர்பி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீரால், கே.ஈச்சம்பாடி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, செவ்வாயன்று நிலவரப்படி விநாடிக்கு, 3 ஆயிரம் கனஅடியாக உள்ளது. இதனால் தடுப்பணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே, தென்பெண்ணையாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே, ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கலில் பரிசல் இயக்க ஆட்சியர் அனுமதி
தருமபுரி, அக்.14- நீர்வரத்து சற்று குறைந்துள்ளதால், ஒகே னக்கலில் பரிசல் இயக்க ஆட்சியர் செவ்வா யன்று அனுமதியளித்தார். வடகிழக்கு பருவமழை தொடங்குவதை யொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே கர்நாடகா - தமிழ் நாடு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ் செட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல், கேரட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்தானது திங்களன்று 24 ஆயிரம் கனஅடி யாக இருந்தது. இதையடுத்து காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் செவ்வாயன்று காலை 8 மணிக்கு நீர்வரத்து விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இருப்பினும் மெயின் அருவி, ஐவர்பாணி, சினிபால்ஸ் ஆகிய அரு விகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டு கிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருவதால், 3 நாட்களுக்கு பிறகு செவ்வாயன்று முதல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற் றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர். அதேசம யம், அருவியில் குளிக்க 4 ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.