tamilnadu

img

நூல் வெளியீட்டு விழா

பி.ஆர்.பரமேஸ்வரன் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை கொண்ட ‘மனித குலத்திற்கு வழிகாட்டும் மார்க்சியம்’ எனும் நூலை என்.ராமகிருஷ்ணன் தொகுத்துள்ளார். இந்நூல் வெளியீட்டு விழா திங்களன்று (ஜூன் 10) சென்னையில் நடைபெற்றது. நூலை தென்சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் க.சின்னையா வெளியிட, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.தனலட்சுமி பெற்றுக் கொண்டார். நிகழ்விற்கு தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.செல்வா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ் ஆகியோர் உடன் உள்ளனர்.