tamilnadu

img

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

கடலூர், அக்.15- 75 விழுக்காடு பார்வையற்ற மாற்றுத்திற னாளிகளை கடும் மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் இணைக்கக்கோரி கடலூரில் போராட்டம் நயைபெற்றது.  மாதாந்திர உதவி தொகை 2000 வழங்க வேண்டும். லேப்டாப், ஸ்மார்ட் போன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நவீன தொழில் பயிற்சி அளிப்பதோடு வேலைவாய்ப்பில் கல்வி தகுதி அடிப்படையில் ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின்  மாவட்டத் தலைவர் ராம.நடேசன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.ஆளவந்தார், பொரு ளாளர் டி.ரவீந்திரன், இணைச் செயலாளர் கே.சாமிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.