tamilnadu

img

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

சென்னையில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

அதன் விவரம்

பணி: Engineering Assistant(Trainee)

காலியிடங்கள்: 6

சம்பளம்: மாதம் ரூ.24,500 - 90,000

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

 

பணி: Technician "C"

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.21,500 - 82,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

 

பணி: Clerk-cum-Computer Operator "C"

காலியிடங்கள்: 5

சம்பளம்: மாதம் ரூ.21,500 - 82,000

தகுதி: பி.காம், பிபிஎம் படிப்புடன் கணினியில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 1.7.2023 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு,செய்முறை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை எஸ்பிஐ செல்லானை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 8.8.2023