tamilnadu

img

பி.எட் தேர்வில் வினாத்தாள் கசிவு - ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் மாற்றம்

பி.எட் செமஸ்டர் வினாத்தாள் கசிந்த விவகாரகத்தை தொடர்ந்து ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டு, புதிய பதிவாளராக ராஜசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பி.எட் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, 4-ஆவது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற இருந்த "படைப்புத்திறனும் உள்ளடக்க கல்வியும்" பாடத் தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது. வினாத்தாள் முன்கூட்டியே வெளியான நிலையில், உடனடியாக வினாத்தாளை ரத்து செய்த உயர் கல்வித்துறை இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்குவதற்கு முன் இணையதளம் மூலம் புதிய வினாத்தாள் அனுப்பி வைத்து, அதன்படி மாற்று வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டு, புதிய பதிவாளராக ராஜசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வினாத்தாள் கசிவு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.