540 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி திருக்கோவிலூரில் தூரிகை மகளிர் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ தலைமையில் 540 கர்ப்பிணிகளுக்கு சீர் வரிசையுடன் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டார். ஒன்றியச் செயலாளர் பூமாரி கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், அய்யனார், பெருமாள், ஒன்றியக்குழு தலைவர் அஞ்சலாட்சி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
                                    