tamilnadu

img

நிவாரணம் கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்- கைது

சென்னை, மே 21 -  ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவா ரணம் கேட்டு வியாழனன்று (மே 21)  தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்  அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 15 ஆயி ரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்,  நலவாரியத்தில் விடுபட்டுள்ள ஓட்டு நர்கள் உறுப்பினராக்கி அனைவருக்கும் நிவாரணம் தர வேண்டும், அந்தந்த மாவட்டங்களுக்குள் பாதுகாப்பு உப கரணங்களோடு  ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும், பெட் ரோல் டீசல் மீதான வரிகளை திரும்ப பெற வேண்டும், ஊரடங்கு காலத்தில் நோயாளி களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது பறிமுதல் செய்த ஆட்டோக்களை விடுவிக்க வேண்டும், தகுதிச் சான்று புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் ஆகியவற்றிற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட  ஆட்டோ சங்  கத்தின் மாவட்டத் தலைவர்  ஏ.கரி முல்லா தலைமையில்  ஆட்சியர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனையடுத்து ஆட்சித்தலைவரை சந்தித்து மனு அளித்துவிட்டு வெளியே வந்தனர். இந்நிகழ்வில் பங்கேற்ற சிஐ டியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்தி ரன், நிர்வாகிகள் சீனிவாசன்,  சங்கர்தாஸ்  உட்பட 20 தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தற்கு ஆட்டோ சங்க செய லாளர் சரவணன் தலைமை தாங்கி னார், சிஐடியு மாவட்ட செயலாளர் இரா.பாரி, நிர்வாகிகள் எம்.வீரபத்தி ரன், சேகர், எஸ்.ஆனந்தன், பாபு, முபாரக், சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.சிவக்கமார், நகர செயலாளர் எம்.ரவி உள்ளிட்ட  பலர் கலந்து கொண்ட னர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆட்டோ தொழிலாளர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

வேலூர்

வேலூர் மாவட்ட ஆட்டோ தொழி லாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.  இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் டி.முரளி தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் கே.ராஜேந்தி ரன், பொருளாளர் எம்.ராமு,  சிஐடியு  மாவட்ட தலைவர் எம்பி.ராமச்சந்தி ரன், செயலாளர் எஸ்.பரசுராமன் உள்ளிட்டோர் பேசினர்.

வடசென்னை

ஆட்டோ தொழிலாளர் சங்க வட சென்னை மாவட்டக்குழு சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலா ளர் சி.திருவேட்டை, ஆட்டோ சங்கத்  தலைவர் ஏ.எல்.மனோகரன், செயலா ளர் வி.ஜெயகோபால், பொருளாளர் டி.எம்.செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளிக்கப்பட்டது.