tamilnadu

img

சென்னை ஐஐடி-யில் இடம் பிடித்த ஆட்டோ ஓட்டுநரின் மகன்!

சென்னை ஐஐடி-யில் இடம் பிடித்து ஆட்டோ ஓட்டுநரின் மகன் பார்த்த பார்த்தசாரதி சாதனை படைத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் நாச்சியார்புரத்தில், ஆதி திராவிடர் மேல்நிலைப்பள்ளியில் படித்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரபோஸ் என்பவரின் மகன் பார்த்தசாரதி, சென்னை ஐஐடி-யில் பி.டெக் - ஏரோஸ்பேஸ் பொறியியல் பாடப்பிரிவில் சேர்ந்த படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இவருக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இவர், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இலவசப் பயிற்சியில் படித்து ஜேஇஇ நுழைவுத்தேர்வில் 112 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.