தமிழகத்திலும் வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்ய முயற்சி தென்சென்னை கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
சென்னை, ஆக. 1 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் சந்தா மற்றும் கியூபா ஒருமைப்பாட்டு நிதி ஒப்படைப்பு நிகழ்ச்சி வியாழனன்று (ஜூலை 31) சைதாப்பேட்டையில் நடை பெற்றது. இந்நிகழ்வில், தீக்கதிர் 812 சந்தாக்களுக்கான தொகை 13 லட்சத்து 61ஆயிரத்து 300 ரூபாயை தீக்கதிர் பொறுப்பாளர்கள் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஜெயசங்கரன் ஆகி யோர் வழங்கினர். கியூபா ஒருமைப்பாட்டு நிதியாக 2 லட்சத்து 21 ஆயிரத்து 450 ரூபாயை செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.வெள்ளைச்சாமி, ம.சித்ர கலா ஆகியோர் வழங்கி னர். அவற்றை பெற்றுக் கொண்ட கே.பால கிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு: சிறுபான்மை மக்கள் மீது பாஜக தொடுத்துவரும் தாக்குதல் அடுத்த கட்டத்தை தாண்டியுள்ளது. அசாமில் 19 லட்சம் பேரை நாடற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பெங்காலி மொழி பேசும் இஸ்லாமியர்களை வங்காளிகள் என்று வங்க தேச எல்லைக்கு கொண்டு சென்று விடுகின்றனர். சிறப்பு வாக்காளர் திருத்தம் என்ற பெயரில் குடியுரிமை ஆவணம் இல்லை என்று கூறி சுமார் 70 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. பீகாரை தொடர்ந்து அடுத்தடுத்து தேர்தல் நடைபெற உள்ள 5மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை செய்ய உள்ளது. உதாரணத்திற்கு வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வேலை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்களை நமது வாக்காளர் பட்டியலில் சேர்க்க உள்ளனர். இத னால் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமையும். இதனை எதிர்த்து நாடு முழுவதும் 8ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 25 விழுக்காடு வரி விதித்துள்ளார். இந்தி யாவை அமெரிக்காவின் சந்தையாக மாற்ற முயற்சிக்கிறார். அதற்கு ஒன்றிய அரசு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் உள்ளது. அமெரிக்காவிடம் சரணாகதி அடையும் கொள்கையை ஒன்றிய அரசு கடைபிடிக்கிறது. இதற்கெதிராக இடது சாரிகள் மட்டுமே குரல் எழுப்புகிறோம். இந்தியாவில் வேலை யின்மை பூதாகரமாகி வரு கிறது. கார்ப்பரேட்டுகள் மட்டுமே வளர்ந்து வரு கின்றனர். அதானி பல்வேறு துறைகளில் கால்பதித்துள் ளார். ஒரேஒரு துறையில் மட்டும் 25ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டி யுள்ளார். அதேசமயம் 48 விழுக்காடு பெண்கள் ரத்தசோகையாலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தை களில் 56 விழுக்காட்டினர் போதிய வளர்ச்சி பெறா மலும் உள்ளனர். இதுதான் இன்றைய இந்தியா. எனவே, அரசியல் ரீதியாக வும், தத்துவார்த்த ரீதியாக வும் பாஜகவை தோற் கடிக்க வேண்டும். வீடு வீடாக செல்லும் நமது பிரச்சாரத்தை தொடர வேண்டும். இந்த பிரச்சாரத்திற்கு தீக்கதிர் பேருதவி புரியும். தமிழகத்தில் ஆண வக்கொலைகள் அதிகரித்து வருகிறது. திராவிட இயக்கங்கள் சாதி ஒழிப்பை கைவிட்டு சமரசம் செய்து கொண்டதால் இத்தகைய கொடுமை நிகழ்கிறது. ஆணவக்கொலையை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார். இந்நிகழ்வில் மாநிலக் குழு உறுப்பினர்கள் எம்.சிவக்குமார், கே. வனஜ
ஒரு உறுப்பினருக்கு ஒரு தீக்கதிர் மாநிலத்திற்கே முன்மாதிரி
இந்நிகழ்வில் பேசிய கே.பாலகிருஷ்ணன், “தென்சென்னை மாவட்டத்தில் 2015 கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலக்குழு நிர்ணயித்த இலக்கை தாண்டி தீக்கதிர் சந்தா சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த 1160 சந்தாக்களுடன் புதிதாக 812 சந்தாக்களை சேர்த்து 1972 தீக்கதிர் விநியோகம் செய்யப்படுகிறது. 2200 சந்தாக்களை சேர்ப்பது என்ற இலக்கு நிர்ணயித்து மாவட்டக்குழு முனைப்போடு செயல்படுகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரு உறுப்பினருக்கு ஒரு சந்தா என்ற புதிய முயற்சியை தென்சென்னை எடுத்துள்ளது. இந்த இலக்கை அடைந்தால், அது தமிழகத்திற்கே முன்னுதாரணமாக இருக்கும்” என்றார். “கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை தாண்டி 2200 சந்தாக்கள் என்ற இலக்கை ஆக.10ந் தேதிக்குள் முடிப்போம். ஆக.15ந் தேதியிலிருந்து பத்திரிகை விநியோகம் நடைபெறும்” என்று மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உறுதியளித்தார்.