tamilnadu

மிதவை அணுமின்நிலையத்தில் 1 கோடி யூனிட் மின்னுற்பத்தி


சென்னை, பிப்.2 ரஷ்யாவின் அணு மின் சக்தி கழகமான ரொசாட்டம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் மிதவை அணு மின் நிலையம் ரோஸனேர்கோட்டம் 1 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து சவ்னி – பிலிப்பினோ மின்வலைத் தொகுப்புக்கு வழங்கியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதியன்று, இந்த மிதவை அணு மின் நிலையம், மின் தொகுப்புடன் யுடன் இணைக்கப்பட்டது. இன்றைய நிலையில், சவ்னி – பிலிப்பினோ நிலப்பகுதி முழுமைக்கான மின் தேவையில் ஐந்தில் ஒரு பங்கை மட்டுமே இந்த மிதவை மின் நிலையம் வழங்குகிறது. எனினும், அடுத்தடுத்து வர இருக்கும் காலங்களில் வளர்ந்து வரும் சுகாட்கா பகுதியின் எல்லா தேவைகளுக்கும் சேர்த்தே, இந்த மிதவை அணு மின் நிலையம் மின்சாரத்தை வழங்கும் என எதிர்பார்க்கப் படுவதாக ரோஸனேர்கோட்டம் திட்டத்தின் இயக்குனரும், மிதவை மின் நிலையக் கட்டுமானம் மற்றும் மின் உற்பத்தி போன்ற பணிகளுக்கு பொறுப்பானவருமான விட்டாலி ட்ருட்னேவ் சென்னையில் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.