tamilnadu

img

கட்டணம் செலுத்தினால் தான் அனுமதி

காஞ்சிபுரம், ஜூன் 3-காஞ்சிபுரம் அடுத்த பெரியார் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கட்டணத்தை  செலுத்தாத மாணவர்களை உள்ளே அனுமதிக்காத நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் பள்ளி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோடைவிடுமுறை முடிந்து  பெரியார் நகர் பகுதியில் இயங்கும் மகாத்மா காந்தி நர்சரி பள்ளி திங்களன்று (ஜூன் 3) திறக்கப்பட்டது. இப்பள்ளியில் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர். பள்ளிக் கட்டணத்தை பெற்றோர்கள் தவணைமுறையில்  கட்டிவந்துள்ளனர்.ஆனால் இந்த ஆண்டு,பள்ளிக் கட்டணம் முழுமையையும் செலுத்த வேண்டும், கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளியில் அனுமதிக்க மாட்டோம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதைக் கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நிர்வாகத்துடன் பெற்றோர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தங்களுடைய முடிவில் உறுதியாக இருந்தனர்.இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவலறிந்து வந்தகாவல்துறையினர் பெற்றோர்களை சமாதனப்படுத்தினர். பிறகு மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.