சென்னை, மார்ச் 9- திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் சனிக்கிழமையன்று இணைந்தது. அக்கட்சிக்கு 2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர் தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவரும், தமிழக முதல்வ ருமான மு.க. ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சனிக் கிழமையன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனது கட்சி நிர்வாகி களுடன் நேரில் சந்தித்து ஆலோ சனை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து, 2024 நாடா ளுமன்றப் பொதுத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்ட ணியை ஆதரித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளும் என்றும் வருகிற 2025-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் மக் கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக் கீடு செய்வதென்றும் முடிவு செய்யப் பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
முதல்வர் உடனான சந்திப்பிற்குப் பின், செய்தியாளர்களுக்குப் பேட்டிய ளித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “‘எங்களுடைய தனிப் பட்ட நலனை விட தேசத்தின் நலனே முக்கியமானது’ என்பதால், திமுக தலைமையிலான கூட்டணியை ஆத ரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கி றோம்.
மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஆனால், இந்த கூட்டணிக்கு எல்லா ஒத்துழைப்பும் அளிப்போம். இது பதவிக்கான விஷ யம் அல்ல, நாட்டுக்கான விஷயம் என்ப தால் எங்கே கைகுலுக்க வேண்டுமோ அங்கு கைகுலுக்கியுள்ளேன்” என கமல்ஹாசன் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஏ.ஜி. மவுரியா, பொதுச்செயலாளர் அருணாச்சலம், ஊடக அணி மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், நிர்வாகக் குழு உறுப்பி னர்கள் அர்ஜூனர், மூர்த்தி, மாணவர் அணி மாநிலச் செயலாளர் ராகேஷ் ராஜ சேகரன், சட்ட ஆலோசகர் எம்.வி. பாஸ்கர் ஆகியோர் சந்திப்பில் உடனி ருந்தனர்.