tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தல் குறித்து அனைத்துக் கட்சி கூட்டம்

காஞ்சிபுரம், ஏப்.29-உள்ளாட்சித் தேர்தல் குறித்து அனைத்து கட்சிக் கூட்டம்காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் திங்களன்று (ஏப்.29) நடைபெற்றது.உள்ளாட்சித் தேர்தல் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை இறுதி செய்வதற்காக கூட்டத்தில் அதிமுக, திமுக, சிபிஎம், சிபிஐ காங்கிரஸ், மதிமுக, விசிக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சிபிஎம் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் நேரு கலந்து கொண்டு பேசகையில், ‘வாக்குச்சாவடிகள் வாக்காளர்களுக்கு அருகாமையில் இருக்க வேண்டும், வார்டு வாரியாக பிரிக்கும்போதும் சேர்க்கும்போதும் அரசியல் கட்சிகளின் ஆலோசனை கேட்க வேண்டும்,ஆளும் கட்சியினர் மற்றும் அலுவலர்கள் மட்டத்தில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டதால் மற்ற கட்சிகளுக்கு புரிதல் இல்லாமல் உள்ளது. ஆனால் இவை அனைத்தையும் செய்து முடித்துவிட்டு தகவல் அறிவிக்கும் கூட்டமாக இக்கூட்டம் நடைபெறுகிறது’ என்றார்.வாக்காளர் பட்டியலில் இறந்தவர்பெயர் இருக்கிறது. ஆனால் உயிருடன் இருப்பர் பெயர் இல்லை.மேலும் பட்டியலில் புகைப்படம் மாறி உள்ளது. இது போன்ற ஏராளமான குறைபாடுகள் வாக்காளர் பட்டியலில் உள்ளது. அரசியல் கட்சிகளின் ஆலோசனை கேட்டு வார்டு மறுவரையறை செய்து இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.மேலும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கூறியதையும் கேட்ட ஆட்சியர் திருத்தத்தை கொடுத்தால் அவை அனைத்தும் பரிசீலனை செய்யப்படும் என்றார்.இக்கூட்டத்தில் சிபிஎம் நகரச் செயலாளர் சி. சங்கர், ஒன்றியச் செயலாளர் இ.லாரன்ஸ், நகரக்குழு உறுப்பினர் லட்சுமிபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;