tamilnadu

ஆலந்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் மெட்ரோ நடை மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு

சென்னை, அக்.8-  ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் 4 ஆண்டு களுக்கு முன்பு திறக்கப்ப ட்டது. ஜி.எஸ்.டி. சாலை வழியாக மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரும் பயணி கள் சாலையை கடக்க பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர். பயணிகள் எளிதில் மெட்ரோ ரெயில் நிலையம் வந்து செல்வதற்கு வசதி யாக ஜி.எஸ்.டி. சாலையின் குறுக்கே மெட்ரோ நடை மேம்பாலம் அமைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்தது. கடந்த ஆண்டு மே மாதம் நடை மேம்பாலம் கட்டு மானப் பணிகள் தொடங்கி யது. இந்த மாதம் இறுதியில் கட்டுமானப் பணிகள் நிறை வடையும் என கூறப்படு கிறது இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர்  கூறுகையில், ‘ ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்து க்கு வந்து செல்லும் பயணிகள் ஜி.எஸ்.டி. சாலையை கடக்க பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். பயணிகள், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அங்கு மிகப்பெரிய நடை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நடை மேம்பாலம் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த மாதம் (நவம்பர்) நடை மேம்பாலம் பயணிகள் வசதிக்காக திறந்து வைக்கப்படும்’ என்றார்.