மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் என ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
அதிமுகவின் 16 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல்:
வடசென்னை – ராயபுரம் ஆர்.மனோ
தென்சென்னை – டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன்
காஞ்சிபுரம் – ராஜசேகர்
அரக்கோணம் – ஏ.என்.விஜயன்
கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ்
ஆரணி – கஜேந்திரன்
விழுப்புரம் – பாக்யராஜ்
சேலம் – விக்னேஷ்
நாமக்கல் – கவிமணி
ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்
கரூர் – தங்கவேல்
சிதம்பரம் – சந்திரகாசன்
நாகப்பட்டினம் – சுர்ஜித் சங்கர்
தேனி – வீ.டி.நாராயணசாமி
மதுரை – டாக்டர் சரவணன்
ராமநாதபுரம் – பா.ஜெயபெருமாள்
மேலும் தேமுதிகவிற்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் அறிவித்தார்.