tamilnadu

img

100 வேலை கேட்டு கள்ளக்குறிச்சியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

100 வேலை கேட்டு கள்ளக்குறிச்சியில்  விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, ஆக.13-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட வேண்டும், சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட கூலி ரூ.336 குறையாமல் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி
யர் அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சட்டத்தை மீறி செயல்படும் மாவட்ட திட்ட அலுவலர்களை கண்டித்ததுடன், திட்ட அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருக்கும் இடத்திற்கு இல வச பட்டா வழங்க வேண்டும் என்றும், 60 வயது நிறைவடைந்த விவசாய தொழி லாளர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் அ.பா.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செய லாளர் பி.சுப்பிரமணியன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் வி.ஏழுமலை, பொருளாளர் பி.பழனி ஆகி
யோர் கண்டன உரையாற்றினர். ஏ.கே.
முருகன், கே.ஆனந்தராஜ், கே.உத்தர குமார், கே.ஜெயமூர்த்தி, எம்.ராஜீவ்காந்தி, எம்.வேல்முருகன், வி.சிவா, அன்பு பாண்டி யன், மோகன்தாஸ், என்.கோவிந்தன் ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.