tamilnadu

img

குடிமனை பட்டா வழங்க நடவடிக்கை சிபிஎம் தலைவர்களிடம் மதுரவாயல் வட்டாட்சியர் உறுதி

சென்னை, நவ. 19 - மதுரவாயல் தொகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களிடம் வட்டாட்சியர் உறுதி அளித்தார். ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக குடியிருப்போருக்கு பட்டா வழங்க தமிழக அரசு அரசாணை (எண் 318) வெளியிட்டுள்ளது. மதுரவாயல் தொகுதியில் பலவகையான நிலங்க ளில் மக்கள் பல வருடங்களாக வசித்து வருகின்றனர். மதுரவாயல் நீர்நிலை, விருகம்பாக்கம் நீர்நிலை, ராமாபுரம், நெற்குன்றம், போரூர், வளசர வாக்கம் போன்ற நீர்நிலைகள் பயன்பாட்டை இழந்துவிட்டன. அத்தகைய நிலங்களில் வீடுகட்டி மக்கள் வசித்து வருகின்றனர். எனவே, அந்நிலங்களை நீர்நிலை பயனற்ற பகுதி என அரசுக்கு பரிந்துரை செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, மதுரவாயல் நீர்நிலை, விருகம்பாக்கம் நீர்நிலை ஆகியவற்றின் ஒரு பகுதியை குடிசை மாற்று வாரியம் கையகப்படுத்தி அங்கு வசிப்போருக்கு கிரயப்பத்தி ரம் கொடுத்துள்ளது. ஒரு பகுதியின ருக்கு கிரயப்பத்திரம் கொடுக்க நிலவகை மாற்றம் செய்ய வேண்டி உள்ளது. எனவே, நில வகைமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மதுரவாயல் நீர்நிலை பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்த பொதுப் பணித்துறை, ஆக்கிரமிப்பு இல்லாத பகுதி என வரையரை செய்து கல் நட்டுள்ளது.

அத்தகைய நீர்நிலையை ஆக்கிரமிக்காமல் பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் பல இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நிலங்களை அரியா கிரையம் பெற்று பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன. அந்த மக்கள் குடியேறிய காலத்தில், அரசின் வழிகாட்டு மதிப்பின்படி தொகையை பெற்றுக்கொண்டு பட்டா வழங்க வேண்டும். 153வது வட்டம், போரூர் ஆர்.இ.நகர் பகுதியில் பல ஆண்டு களாக சுமார் 650 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்குள்ள மக்களுக்கு அரசின் வழிகாட்டி மதிப்பின்படி கிரை யத்தொகையை பெற்றுக்கொண்டு பட்டா வழங்க அறநிலையத்துறை க்கு பரிந்துரை செய்ய வேண்டும், மேலும், வட்டாட்சியர் அதிகாரத்திற்கு உட்பட்டு வண்டி பாட்டை, களத்துமேடு போன்ற நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று (நவ.19) மதுரவாயல் வட்டாட்சியர் அலுவல கத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. மனு கொடுப்பதற்காக வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். இதனையடுத்து மதுரவாயல் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவுடன், வட்டாட்சி யர் டி.சந்திரசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் நேரடியாக மக்க ளிடமே கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு பேசுகையில், “மனுக்களை பகுதி வாரியாக பரி சீலித்து, சம்பந்தப்பட்ட துறைக ளுக்கு பரிந்துரை செய்து பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை களை எடுக்கப்படும்” என்று தலைவர்களிடம் உறுதி அளித்தார். இப்போராட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.வெள்ளைச்சாமி, பகுதிச் செயலாளர் வி.தாமஸ் உள்ளிட்டோர் பேசினர்.