வீனஸ் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த நாள்
சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் 94-வது பிறந்தநாள் விழா மற்றும் உலக மாணவர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு வீனஸ் கல்வி குழுமத்தின் நிறுவனர் வீனஸ் எஸ். குமார் தலைமை தாங்கி அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழாவில் பள்ளியின் முதல்வர் த. நரேந்திரன் கலந்து கொண்டு கலாமின் வாழ்க்கை வரலாற்றை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
