tamilnadu

img

சென்னை அயன்புரத்தில் செயல்பட்டு வரும் நிர்மல் பள்ளி மாணவர்

சென்னை அயன்புரத்தில் செயல்பட்டு வரும் நிர்மல் பள்ளி மாணவர்களுக்கு, தமிழ்நாடு தோல் உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர் சங்கம் (டால்டியா) வெள்ளியன்று (ஜூலை 5) இலவச சீருடைகளை வழங்கியது. இந்நிகழ்வில்  சிஐடியு தலைவரும் பள்ளியின் செயலாளருமான அ.சவுந்தரராசன், மாநிலச் செயலாளர்  கே.ஆர்.கணேசன், துணைத் தலைவர் திருப்பூர் சந்திரன், திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர் சங்கத் தலைவர் டி.ஸ்டாலின், பொருளாளர் ஏ.தவக்குமார், டால்டியா தலைவர் என்.அப்துல் ரஹீம், துணைத் தலைவர்கள் எம்.பரந்தாமன், எம்.அப்துல்ரஹீம், பொருளாளர் நாசர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஜெயா, கலைச்செல்வி, பொறுப்பாளர்கள் குமார், வி.டில்லிபாபு, சி.எஸ்.உஷா ஆகியோர் பங்கேற்றனர்.  3 ஆண்டுகளாக பள்ளிக்கு தேவையான உபகரணங்களை டால்டியா நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.