tamilnadu

img

இசைமேதை எம்.பி.சீனிவாசனுக்கு சென்னையில் சிலை அமைத்திடுக

இசைமேதை எம்.பி.சீனிவாசனுக்கு சென்னையில் சிலை அமைத்திடுக

சென்னை, அக். 11 - இசை மேதை எம்.பி.சீனிவாசன் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் அவரது உருவச் சிலையை நிறுவ வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் மத்தியசென்னை மாவட்ட மாநாடு 2ஆவது மாநாடு சனிக்கிழமையன்று (அக்.11) தேனாம்பேட்டையில் நடைபெற்றது. மாநாட்டில், இசை மேதை எம்.பி.சீனி வாசன் நூற்றாண்டு விழாவை அரசு கொண்டாட வேண்டும், அவரது பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்க வேண்டும். தேவநேயப் பாவாணர் நூலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கை கலை இலக்கிய அமைப்புகளுக்கு சலுகை கட்டணத்திலும், சிற்றரங்கை இலவசமாகவும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு மாநிலக்குழு உறுப்பினர் நா.வே.அருள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் இரவீந்திர பாரதி, வீரபெருமாள் தலைமை தாங்கினர். எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன் வரவேற்றார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் நாடகவியலாளர் பிரளயன் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டக்குழு அறிக்கையை மாவட்டச் செயலாளர் நா.பால கிருஷ்ணனும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் சிவ.செந்தில்நாதனும் சமர்ப்பித்தனர். எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன், வடசென்னை மாவட்டச் செய லாளர் மணிநாத் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா நிறைவுரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் ரமேஷ் நன்றி கூறினார். நிர்வாகிகள் மாவட்டத் தலைவராக சிவ.செந்தில்நாதன், செயலாளராக நா.பாலகிருஷ்ணன், பொருளாளராக ஏ.எஸ்.கல்யாண் குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.