tamilnadu

img

பீகாரில் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு பிரம்மாண்ட நினைவேந்தல் கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மறைந்த தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு நாடு முழுவதும் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அக்.1 அன்று பீகார் தலைநகர் பாட்னாவில் “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் சார்பில் சீத்தாராம் யெச்சூரிக்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் பீகார் மாநிலச் செயலாளரும், மத்தியக் குழு உறுப்பினருமான லாலன் சவுத்ரி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தின் இரங்கல் தீர்மானத்தை சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் அவதேஷ் குமார் வாசித்தார். சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் டாக்டர் அசோக் தாவ்லே, சிபிஐ மாநில செயலாளர் ராம் நரேஷ் பாண்டே, சிபிஐ (எம்-எல்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராஜாராம் சிங் எம்.பி., ராஷ்ட்ரிய ஜனதாதள மாநில பொதுச்செயலாளர் நிர்பய் அம்பேத்கர், பார்வர்டு பிளாக் மாநில தலைவர் ஏ.மஹதோ ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு தோழர் சீத்தாராம் யெச்சூரியின் வாழ்க்கை மற்றும் பணிக்கு செழுமையான அஞ்சலி செலுத்தியதுடன், அவரது பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.