tamilnadu

img

12 ஆண்டுகாலமாக மூடியே கிடக்கும் கழிவறை

கிருஷ்ணகிரி, செப்.2- தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் 12  ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5 லட்சம் செலவில் கழிப் பறை கட்டப்பட்டது. அந்த கழிப்பறை இதுவரைக்கும் திறக்கப்படாமல் உள்ளது.  பேருந்து நிலையத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் பலரும் உபாதைகளை கழிக்க, வசதி இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். கழிப்பறை சுவ ரொட்டிகள் ஒட்ட மட்டுமே  பயன்பட்டு வருகிறது. இது குறித்து அரசு அதிகாரி களுக்கு பலமுறை புகார்  செய்தும் மாற்றுத்திறனாளி கள் மீது இந்த பாரபட்சம் காட்டுவது ஏன் என்று கேள்வி  எழுந்துள்ளது. 12 ஆண்டுகாலமாக திறக் கப்படாமல் உள்ள அந்த கழிப்பறையை உடனடியாக மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாது காப்போர் நலச் சங்க செய லாளர் பெரியசாமி, தலைவர் திருப்பதி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் வலி யுறுத்தியுள்ளனர்.