tamilnadu

img

கேரளா வித்யாலயா பள்ளியில் 95 விழுக்காடு தேர்ச்சி

சென்னை, மே 6 - கேரளா வித்யாலயம் பள்ளி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95. 28 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள் ளது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் கேரளா வித்யா லயம் மேல்நிலைப் பள்ளியில் 67 மாணவர்கள், 39 மாணவிகள் என 106 பேர் தேர்வு எழுதினர். இவர்க ளில் 63 மாணவர்கள், 38 மாணவிகள் என 101 பேர் (95.28 விழுக்காடு) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

வி.பி.அனாமிகா 600க்கு 544 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலி டம் பிடித்துள்ளார். என்.யுவஸ்ரீ 539 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றார், வணிகவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ள கே.ஜெ.நவரீனா 521 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.