tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்  5 அடுக்கு பாதுகாப்பு  

சென்னை, ஆக,14- நாடு முழுவதும் நாளை 79 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் பகுதிகளில் மத்திய அரசு பாதுகாப்பை தீவிரபடுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சென்னை அணுமின் நிலையம் பாபா அனு ஆராய்ச்சி மையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாவினி உள்ளிட்ட பல்வேறு அணுசக்தி துறை சார்ந்த பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. தற்போது அங்கு பாதுகாப்பு கருதி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளே செல்லும் நுழைவு வாயில் பகுதியில் இருசக்கர வாகனம் கார் வேன் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அணுமின் நிலைய வளாகத்தின் உள்ளே அனுப்பபடுகிறது.

டெலிபோட்டா கேமராவுடன் புதிய  ஸ்மார்ட்போன்  

சென்னை, ஆக. 14-  புதுமையான உல களாவிய ஸ்மார்ட்போன் பிராண்டான விவோ, நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட புகைப்பட தொழில்நுட்பம் ஆகிய வற்றுடன் மிகவும் சக்தி வாய்ந்த வி60 ஸ்மார்ட்போனை அறி முகப்படுத்தியுள்ளது. இது வரும் 19-ந்தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ‘இந்த ஸ்மார்ட்போனில் பிரீமியம் குவாட்-வளைந்த 17.20 செ.மீ டிஸ்ப்ளே, அல்ட்ரா-காம்பாக்ட் கேமரா தொகுதி மற்றும் இந்திய கலாச்சார மையக்கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க வண்ணத் தொகுதி என ஏராளமான சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் இதற்கு கூடுதல் சிறப்பாக 50 எம்பி டெலி போட்டோ கேமரா மற்றும் மல்டிபோகல் போர்ட்ரெய்ட் மோடுகளுடன் கூடிய விவோ ஜெய்ஸ் இமேஜிங் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.

உழவர் சந்தையில் ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு

திருவண்ணாமலை, ஆக.14-  உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாநக ராட்சியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாநகராட்சி மத்தளங்குளம் தெருவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்கள் வீடுகள் தோறும் குப்பை கள் சேகரம் செய்யும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் குப்பை களை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  மேலும் திருவண்ணாமலை உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளில் விவசாயிகளின் சொந்த உற்பத்தி பொருட்களை விற்பனை செய்கிறார்களா என்பதையும் ஒதுக்கீடு செய்யும் கடைகளில் பதிவேட்டினையும் ஆய்வு மேற்கொண்டார்.  மேலும் விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து வேங்கிக்கால் புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் காலை உணவை குழந்தைகளோடு அமர்ந்து, மாவட்ட ஆட்சியர் காலை உணவு சுவைத்து உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.